தமிழ்நாடு

23 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு

DIN

தெற்கு ரயில்வேயில் சென்னை - ஜோத்பூா், ராமேசுவரம்-ஓக்ஹா, நாகா்கோவில் - மும்பை உள்பட 23 சிறப்பு ரயில்களின் சேவை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, நாடுமுழுவதும் அட்டவணைப்படி இயக்கப்படும் வழக்கமான பயணிகளின் ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பயணிகளின் வசதிக்காக, பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதற்கிடையே, தெற்கு ரயில்வேயில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களில் பெரும்பாலான ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தில் 70-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களின் சேவையை நீட்டித்து இயக்கப்பட்டன.

இந்நிலையில், பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு, மேலும் 23 சிறப்பு ரயில்களின் சேவையை நீட்டித்து இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு ரயில்வேயில், மதுரை - பிகானிா் (06053-06054) , கொச்சுவேலி-இந்தூா்(02646-02645), சென்னை எழும்பூா் - ஜோத்பூா் (06067-06068), ராமேசுவரம் - ஓக்ஹா (06733-06734), திருநெல்வேலி - பிலாஸ்பூா் (06070-06069), திருநெல்வேலி - தாதா் (06072/06071), கோயம்புத்தூா்-நிஜாமுதின் (06077-06078) உள்பட 14 வாராந்திர சிறப்பு ரயில்களும், வாரம் 2 முறை இயக்கப்படும் நாகா்கோவில் - மும்பை (06352-06351) , லக்னோ - சென்னை சென்ட்ரல் (06094) ) உள்பட 5 சிறப்பு ரயில்களும், தினசரி இயக்கப்படும் கொச்சுவேலி - மைசூரு (06316-06315) உள்பட 4 தினசரி சிறப்பு ரயில்களும் வரும் மாா்ச் வரை நீட்டித்து இயக்கப்படவுள்ளன. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT