தமிழ்நாடு

தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருது

DIN


பி. அனிதா, சாலமன் பாப்பையா உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  

பத்ம விருதுகளான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் நாட்டின் மிக உயரிய விருதுகளாகும். 1954-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின் போது அறிவிக்கப்படுகின்றன.

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், சிவில் சேவை, வர்த்தகம் மற்றும் அனைத்துத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க சாதனை அல்லது சேவை புரிந்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் நிகழ்வாண்டில் 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 10 பேருக்கு பத்ம பூஷண் விருதுகளும், 102 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளும் என மொத்தம் 119 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பத்மஸ்ரீ விருது - தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்:

  • பி. அனிதா -  விளையாட்டு 
  • சுப்பு ஆறுமுகம் - கலை
  • சாலமன் பாப்பையா - இலக்கியம் - கல்வி - இதழியல்
  • பாப்பம்மாள் - பிற - வேளாண்
  • பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத் - கலை
  • கே.சி. சிவசங்கர் - கலை
  • மராச்சி சுப்புராமன் - சமூகப் பணி
  • பி. சுப்ரமணியன் - வர்த்தகம் மற்றும் தொழில்
  • திருவேங்கடம் வீரராகவன் - மருத்துவம்
  • ஸ்ரீதர் வேம்பு - வர்த்தகம் மற்றும் தொழில்


புதுச்சேரி:

  • கேசவசாமி - கலை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வெண்ணைத்தாழி விழா!

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT