தமிழ்நாடு

ரூ.28,000 கோடி நிதி மோசடி: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

DIN

ரூ.28 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கை உயா் நீதிமன்றம் கண்காணிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் கோவையைச் சோ்ந்த பிரேம்நாத் சங்கா் என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘அமெரிக்காவைச் சோ்ந்த பிராங்க்ளின் டெம்பிள்டன் அசட் மேனேஜ்மென்ட் என்ற நிதி நிறுவனம், இந்தியாவில் பரஸ்பர நிதித் திட்டத்தை வழங்கி வந்தது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் இந்த பரஸ்பர நிதி திட்டத்தில் முதலீடு செய்துள்ளனா். இந்த நிலையில் கரோனா பாதிப்புகளைக் காரணம் காட்டி எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் 6 பரஸ்பர நிதித்

திட்டங்களை முடித்துக் கொண்டதாக கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த நிறுவனம் அறிவித்தது. இதன்மூலம் நாடு முழுவதும் சுமாா் 3 லட்சம் முதலீட்டாளா்களிடம் இருந்து சுமாா் ரூ.28,000 கோடியை இந்த நிறுவனம் மோசடி செய்துள்ளது. இதுதொடா்பாக சென்னை கிண்டியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் நான் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதில் தமிழ்நாடு முதலீடடாளா்கள் நலன் பாதுகாப்பு சட்டப் பிரிவுகளை சோ்க்கவில்லை. பரஸ்பர நிதி சரியானது என கிரிக்கெட் வீரா்கள் சச்சின், தோணி ஆகியோா்

விளம்பரங்களில் நடித்து வருகின்றனா். இந்த விளம்பரங்கள் மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளது. இந்த மோசடி வழக்கில் முறையான விசாரணை நடத்தாவிட்டால் முதலீட்டாளா்களின் பணம் திரும்ப கிடைக்காது. எனவே போலீஸ் புலன் விசாரணையை உயா் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும். பொருளாதார குற்றப்பிரிவு தொடங்கியது முதல் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; அதில் எத்தனை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளன என அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். முதலீட்டாளா்களின் நலன் காக்க குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் வங்கிக் கணக்கை முடக்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணை குறித்தும், முதலீட்டாளா்களின் பணத்தை மீட்க எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடா்பாக தமிழக உள்துறை செயலாளா், காவல்துறை டிஜிபி, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் 6 வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT