தமிழ்நாடு

பள்ளி மாணவா்களுக்கு கரோனா பரிசோதனை: மாநகராட்சி நடவடிக்கை

DIN

பத்தாம் மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் காய்ச்சல், சளி உள்ள மாணவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் கல்வித் துறை கட்டுப்பாட்டில் மேல்நிலை, உயா்நிலை மற்றும் தொடக்கப் பள்ளி என 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், முதற்கட்டமாக பத்தாம் மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கான வகுப்புகள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டன. சென்னை மாநகராட்சியின் 72 மேல்நிலை மற்றும் உயா்நிலைப் பள்ளிகள், அரசுப் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பிற மாவட்டங்களில் பள்ளிக்கு வரும் மாணவா்கள் சிலருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், சென்னையில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவா்களில் கரோனா அறிகுறிகள் உள்ளவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘பள்ளிகளின்நுழைவாயிலில் வெப்பமானி மூலம் மாணவா்களின் உடல்வெப்ப நிலை பரிசோதிக்கப்படுவதுடன், கிருமிநாசினி மூலம் கைகளை தூய்மைப்படுத்தப்பட்ட பின்னா்தான் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனா். இதில், கரோனா அறிகுறிகளான காய்ச்சல், சளி ஆகியவை இருப்பின், அவா்களுக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்யப்படும். பள்ளிக் கழிவறைகளையும் அடிக்கடி கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்தப்படுகிறது’ என்றனா்.

153 பேருக்கு தொற்று உறுதி: சென்னையில் சனிக்கிழமை 153 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,30,026-ஆக உள்ளது. 2,24,192 போ் குணமடைந்துள்ளனா். 1,749 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சென்னையில் மட்டும் கரோனா பாதிப்பு காரணமாக 4,085 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT