தமிழ்நாடு

ஸ்ரீ மகாமாரி  நாக அம்மன் ஆலயத்தில் பொங்கல் வைத்து வழிபாடு

DIN



ஸ்ரீ மகாமாரி  நாக அம்மன் ஆலயத்தில் பொங்கல் வைத்து வழிபாடு பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருக்குவளை-கொளப்பாடு பிரதான சாலையில் காருகுடி கிராமத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் ஸ்ரீ மகாமாரி  நாக அம்மன் ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் காணும்  பொங்கல் அன்று பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நிகழாண்டு பருவம் மாறி பெய்த தொடர் மழையால் காணும் பொங்கல் அன்று நடைபெற இருந்த பொங்கல்  வைத்து வழிபடும் நிகழாவானது ஞாயிற்றுக்கிழமை(ஜன.24) நடைபெற்றது.

சுமார் 50 பக்தர்கள் மண்பானையில் ஒரே நேரத்தில் பொங்கல் வைத்து இறைவனுக்கு படையலிட்டு வழிபாடு செய்தனர்.

முன்னதாக அம்மனுக்கு பால்,பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு பின்னர் மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மேலும் ஒவ்வொரு வருட காணும் பொங்கலின் பொழுதும் இக்கோவிலில் பிரார்த்தனை செய்துகொண்டு பொங்கல் வைத்து வழிபடுவோரின் வேண்டுதல் ‌ அடுத்த ஆண்டு காணும் பொங்கல் வருவதற்குள் நிறைவேறி விடுவதாக பக்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணத்தடை,குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்கவும் ,பில்லி சூனியம் நீக்குதல் மற்றும் ராகு கேது பரிகார ஸ்தலமாகவும்  விளங்குகிறது. அரசமரமும் வேப்பமரமும் ஒன்றிணைந்து கோவில் வளாகத்தில் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

SCROLL FOR NEXT