தமிழ்நாடு

'திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க  வேண்டும்'

DIN

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

ஊத்தங்கரையில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீ வித்யா மந்திர் விருந்தினர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .

நிகழ்ச்சிக்கு மாநில பொதுச் செயலாளரும் முன்னாள் மேலவை உறுப்பினருமான செ. முத்துசாமி தலைமை வகித்தார். ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே. சந்திரசேகரன் மாநில பொதுக்குழுவை தொடங்கி வைத்தார். மாநில பொருளாளர் ரக்ஷித் நிதிநிலை அறிக்கையை வாசித்தார்.

மாநில அமைப்புச் செயலாளர் ஞானசேகரன், மாவட்டச் செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பொதுச் செயலாளர்(பொறுப்பு) பாலகிருஷ்ணன், ஊத்தங்கரை துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளரும் முன்னாள் மேலவை உறுப்பினருமான முத்துசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். பிரதமர் நரேந்திரமோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்றும் திருக்குறளை உதாரணம் காட்டி பல இடங்களில் சிறப்புரையாற்றுகிறார். எனவே, திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஜெயலலிதா பழைய ஓய்வூதிய  திட்டத்தை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை தருவதாகக் கூறும் தற்போதைய ஆட்சியாளர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளை வாபஸ் பெற வேண்டும். போராட்டக் காலத்தில் பிடிக்கப்பட்ட சம்பளத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 

கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியின்போது நடைபெற்ற போராட்டங்களில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சம்பள பிடித்தம் செய்யவில்லை. ஆனால், தற்போதைய அரசு சம்பளத் தொகையை பிடித்தம் செய்துள்ளது. பிடித்தம் செய்த சம்பளத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகள் பல காரணங்களைச் சொல்லி மூடி வருகிறார்கள். இதனைத் தடுக்கும் வகையில் அரசு நிதி உதவிபெறும் தனியார் பள்ளிகளை அரசு பள்ளிகளாக மாற்ற வேண்டும் எனக் கூறினார். முன்னதாக கலைச்செல்வன் வரவேற்றார். இறுதியாக சிவ.கணேசன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT