தமிழ்நாடு

தேனி பல்லவராயன் பட்டி ஜல்லிக்கட்டு விழா துவங்கியது

24th Jan 2021 09:14 AM

ADVERTISEMENTஉத்தமபாளையம்: தேனி மாவட்டம் பல்லவராயன் பட்டி ஜல்லிக்கட்டு விழா ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மற்றும் 600 காளைகள் , 350 மாடுபிடி வீரர்களுடன் கோலாகலமாக தொடங்கியது.

பல்லவராயன் பட்டி அருள்மிகு ஏழைகாத்த அம்மன் ஸ்ரீ வல்லடிகாரர் சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெறும். அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி அளவில் ஜல்லிக்கட்டு விழா தொடங்கியது.

முதல் காளையாக ஊர் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் வந்திருந்த 600 காளைகளை ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்படுகிறது. மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு ஜல்லிக்கட்டு காளையை அடக்கி பரிசுகளைப் பெற்று செல்கின்றனர்.

ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் பல்லவராயன் பட்டி ஜல்லிக்கட்டு விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
 

ADVERTISEMENT

Tags : Jallikattu Festival Pallavarayan Patti Theni
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT