தமிழ்நாடு

மீண்டும் பழனிசாமி முதல்வராக வேண்டி அதிமுகவினர் வைத்தீஸ்வரன் கோவிலில் தங்க ரதம் இழுத்து வழிபாடு

24th Jan 2021 10:17 AM

ADVERTISEMENT

 

சீர்காழி:  தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக வேண்டி அதிமுகவினர் வைத்தீஸ்வரன் கோவிலில் தங்க ரதம் இழுத்து வழிபாடு செய்தனர். 

சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் தருமபுரம் ஆதீனத்திற்கு உள்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது. செவ்வாய் பரிகார ஸ்தலமான இக்கோவிலில் தனி சன்னதியில் செல்வமுத்துக்குமாரசாமி அருள்பாலிக்கிறார். இங்கு தை கிருத்திகையையொட்டி செல்வ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு வழிபாடு  சனிக்கிழமை நடைபெற்றது. இரவு தங்க ரத பிரகார உலா நடைபெற்றது. 

இதில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக வேண்டி மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

ADVERTISEMENT

தொடர்ந்து மாவட்ட செயலாளர் விஜிகே செந்தில்நாதன், அமைப்பு செயலாளர் ஆசை மணி, மாவட்ட இணை செயலாளர் ரிமா ராஜ்குமார், துணை செயலாளர்கள் செல்லையன், ரமா மணி  ஆகியோர் வடம்பிடித்து தங்க ரதத்தை இழுத்து வந்தனர். 

இதில் முன்னாள் எம்எல்ஏ சக்தி, ஒன்றிய செயலாளர்கள் ஏகே சந்திரசேகரன், சிவக்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நாடி.முத்து , மண்டல துணை தலைவர் சத்தியமூர்த்தி , நகர செயலாளர் பக்கிரிசாமி, பேரூர் கழக செயலாளர் போகர். ரவி, வக்கீல் மணிவண்ணன் உள்ளிட்ட திரளான அதிமுகவினர் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர்.

Tags : Pray for Palanisamy Chief Minister again
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT