தமிழ்நாடு

குமாரபாளையம் ஜல்லிக்கட்டு: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

24th Jan 2021 10:27 AM

ADVERTISEMENT

 

நாமக்கல்: குமாரபாளையம் ஜல்லிக்கட்டு போட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏழு அமைச்சர்கள் பங்கேற்று தொடங்கி வைத்தனர்.

பொங்கல் பண்டிகையை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு விழா கோலாகலமாக நடைபெறும்.

ADVERTISEMENT

அதன்படி, நிகழாண்டில் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம்.கல்லூரி பின்புறம் உள்ள மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது.

மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன், கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை அமைச்சர் சி.ஆர். விஜயபாஸ்கர், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, போக்குவரத்து அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்று விழாவை தொடங்கி வைத்தனர். 

ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளை அடக்கும் வீரர்கள்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் ஆர்வமுடன் அடக்க முயற்சித்தனர். குமாரபாளையம் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் போட்டியை கண்டு ரசித்தனர்.

விழாவில் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சி. சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி, கே.பி.பி.பாஸ்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள், அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : jallikattu kumarapalayam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT