தமிழ்நாடு

எந்தக் காலகட்டத்திலும் மக்களைச் சந்திக்கின்ற கட்சி திமுக: கனிமொழி

DIN

காரைக்குடி: எந்தக் காலகட்டத்திலும் மக்களைச் சந்திக்கின்ற கட்சி திமுக: கனிமொழி

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற 2 நாள் சுற்று பயணத்தை திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காரைக்குடியில் தொடங்கினார்.

காலையில் 2-வது போலீஸ் பீட் பகுதியில் மாவட்ட திமுக செயலாளர் கே.ஆர். பெரியகருப்பன் தலைமையில் கட்சியினர் மற்றும் மகளிரணியினர் வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து அண்ணா சிலை, பெரியார் சிலை, தமிழ்த்தாய் சிலைக்கு கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் சாக்கோட்டை ஒன்றியம் கிழக்கு திமுக சார்பில் சங்கராபுரம் ஊராட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகளிர் சுய உதவி குழுவினரின் குறைகளை கேட்டறிந்த அவர், பெண்கள் மத்தியில் பேசுகையில், இங்கு பெண்கள் அதிமுக ஆட்சி மீது கோபத்தில் இருப்பதை காணமுடிகிறது. இதே நிலைப்பாட்டில் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மக்கள் இந்த ஆட்சி மீது கோபமாக இருக்கிறார்கள்.

அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. பல பகுதிகளில் பாதாள சாக்கடை என்ற பெயரில் 10 ஆண்டுகளுக்கும் மேல் சரிவர பணிகளைச் செய்யவில்லை. தண்ணீர் வசதிகள் செய்துதரப்படவில்லை.  

இங்கு பேசிய பெண்கள் பட்டா மாறுதல் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்தனர். படித்து முடித்த பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தவில்லை என்றும் தெரிவித்தனர். உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் அடுத்து அமையும் திமுக ஆட்சியில் ஸ்டாலின் முதல்வராக வந்து நிறைவேற்றித் தருவார் என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இப்போது தான் மக்களை சந்திக்கிறார். ஆனால் எந்தக் காலகட்டத்திலும் மக்களைச் சந்திக்கின்ற கட்சி திமுக என்றார் கனிமொழி.

தொடர்ந்து தேவகோட்டை பகுதியில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் குன்றக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT