தமிழ்நாடு

திமுக கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையும்: எல்.முருகன் பேட்டி

DIN


சேலம்: திமுக கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையும். தேர்தலுக்கு முன்னதாகவே அது உடையக்கூடும். பாஜக-அதிமுக கூட்டணி பலமாக உள்ளது என்று பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் கூறினார்.

சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெறவுள்ள உள்ள தாமரை இளைஞர்கள் சங்கமம் மாநாட்டிற்கான கால்கோல் பணியை எல்.முருகன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது: உலகத்திற்கு வழிகாட்டியாக உள்ள மோடியின் ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் என்பது இளைஞர்களின் விருப்பம். சேலம் பாஜகவின் தியாக பூமி. பிப்ரவரி மாதம் முழுவதும் தமிழகத்தில் பாஜகவின் மாநாடுகள் நடைபெறும். மார்ச் மாதம் மாபெரும் மாநில மாநாடு நடைபெறுகிறது. 

வேல் யாத்திரை வெற்றி: வெற்றிவேல் யாத்திரைக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஸ்டாலின் வேல் தூக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஓட்டுக்காகத்தான் ஸ்டாலின் இரட்டை நிலைப்பாடு காட்டுகிறார். என்னதான் இரட்டை வேடம் பேட்டாலும் மக்கள் நம்ப மாட்டார்கள்.

பாஜக வைத்த தைப்பூச விடுமுறை கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்தார். 

ராகுல்காந்தியின் பிரசாரம் தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பாஜகவின் மாநாடுகள் தமிழக அரசியலை புரட்டி போடும்.  

திமுக கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையும். தேர்தலுக்கு முன்னதாகவே அது உடையக்கூடும். பாஜக - அதிமுக கூட்டணி பலமாக உள்ளது என்று எல்.முருகன் கூறினார்.  

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT