தமிழ்நாடு

காட்டு யானை மீது தீ வைத்தவர்கள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும்: ஸ்டாலின்

23rd Jan 2021 06:48 PM

ADVERTISEMENT

காட்டு யானை மீது தீ வைத்தவர்கள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூலில், காட்டில் வாழ்பவற்றை மிருகங்கள் என்கிறோம். ஆனால் நாட்டில் நடமாடுவோரே மிருகங்கள் என நினைக்கும் அளவுக்கு, நீலகிரியில் யானையை தீ வைத்து எரித்துக் கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.  

யானை என்பது ஒற்றை உயிரினமன்று; காட்டிலும் நாட்டிலும் பல்லுயிர்ச் சூழலைப் பாதுகாத்துப் பெருக்குகின்ற இயற்கைத் தோழன்!

அதன் அருமை அறியாது, மனிதத்தன்மையற்ற வகையில் தீ வைத்தோரையும் இத்தகைய வன்செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் மனித மிருகங்களையும், சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பிவிடாதபடி விரைந்து தண்டித்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

ADVERTISEMENT

Tags : DMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT