தமிழ்நாடு

கம்பம் தொகுதியை தமாகவுக்கு ஒதுக்க அதிமுகவுக்கு கோரிக்கை

23rd Jan 2021 11:42 AM

ADVERTISEMENT

 

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியை அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேனி மாவட்ட கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி தமிழ்மாநில காங்கிரஸ் ஆலோசனைக்கூட்டம் கம்பத்தில் தனியார் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கூடல்.சி.செல்வேந்திரன் தலைமை வகித்தார். ஓ.ஆர்.குமரேசன் முன்னிலை வகித்தார். சின்னக்கவுண்டர் ந.சு.ராஜசேகரன் வரவேற்று பேசினார். 

கூட்டத்தில் தமிழக அரசின் வளர்ச்சித்திட்டங்களுக்கு பாராட்டுத் தெரிவித்து, மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

ADVERTISEMENT

மேலும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள தமாகவுக்கு கம்பம் பேரவைத் தொகுதியை ஒதுக்க வேண்டும் என்றும்,  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தீர்மான நகலை அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர்களுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் கம்பம்,நகரம், ஒன்றியம் உள்ளிட்ட தொகுதி முழுவதும் பொறுப்புக்குழு அமைக்கப்பட்டது. 

காந்தி, எம்.எஸ்.கணேசன், கோட்டை குமார், எல்.ஆர்.சுப்பிரமணி உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

Tags : Cumbam assembly constituency Tamil Maanila Congress
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT