தமிழ்நாடு

திருப்பூர் மாவட்டத்தில் ராகுல்காந்தி இன்று தேர்தல் பிரசாரம்

23rd Jan 2021 10:49 AM

ADVERTISEMENT


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 2 நாள்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி தில்லியில் இருந்து தனி விமானத்தில் சனிக்கிழமை கோவை வருகிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் கார் மூலமாக திருப்பூர் மாவட்டம் அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன்பாக சனிக்கிழமை மாலை 3.30 மணி முதல் 3.45 மணி வரையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். 

இதைத்தொடர்ந்து, திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் மாலை 4.10 முதல் 4.40 வரையிலும், ரயில் நிலையம் முன்பாக உள்ள திருப்பூர் குமரன் நினைவுத் தூணுக்கு சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். 

இதன் பிறகு திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் மாலை 5.45 முதல் 6.45 மணி வரையில் தொழில் முனைவோர் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுகிறார். இதன் பிறகு பொதுப்பணித்துறை விடுதியில் தங்குகிறார்.

ADVERTISEMENT

2 ஆவது நாள் தேர்தல் பிரசாரம்: இதைத்தொடர்ந்து, 24 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருப்பூரில் இருந்து கார் மூலமாமக ஈரோடு செல்லும் ராகுல்காந்தி பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இதன் பிறகு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 

இதன் பின்னர் அங்குள்ள தனியார் விடுதியில் இரவு தங்கும் அவர் திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் கரூர் மாவட்டம் செல்கிறார்.

Tags : Rahul Gandhi Tirupur district today election campaigning
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT