தமிழ்நாடு

நீடாமங்கலத்தில் நேதாஜி பிறந்தநாள் விழா

23rd Jan 2021 04:43 PM

ADVERTISEMENT

 

இந்துஸ்தான் மக்கள் இயக்கம் சார்பில் நீடாமங்கலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாள் விழா நிறுவனத்தலைவர் எஸ்.எஸ்.குமார் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. 

எக்ஸ்னோரா நிர்வாகி எம்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். த.மாகா நகர நிர்வாகி என்.ஆர்.கார்த்திகேயன் நேதாஜி படத்திற்கு மாலை அணிவித்தார். விழாவில் விவசாய சங்க தலைவர் வைத்திலிங்கம்,,

பாஜக வடக்கு ஒன்றிய தலைவர் எல்.ஜெயகுமார், ஒன்றிய பொதுச் செயலர் சிந்துசுப்ரமணியன், ரெயில்வே(ஓய்வு) மகேந்திரன், ஆசிரியர் பி.ஜெகதீஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

நேதாஜியின் திருவுருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நூலகர் சு.ராகவன் வரவேற்றார். இயக்க நிர்வாகி எஸ்.சுரேஷ் நன்றி கூறினார். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT