தமிழ்நாடு

விவசாயிகளை தொழிலதிபர்களுக்கு வேலைக்காரர்களாக மாற்றும் மோடி: கோவையில் ராகுல் பேச்சு

DIN


கோவை:  விவசாயிகளை தொழிலதிபர்களுக்கு வேலைக்காரர்களாக மாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி என்று கோவையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி  கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சனிக்கிழமை முதல் 3 நாள் பிரசாரத்தை தொடங்கினார். முன்னதாக, சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு தனி விமானம் மூலம் கோவை வந்த ராகுல்காந்தி அவினாசி சாலையில் சித்ரா சந்திப்பில் பேசியதாவது:  தமிழகத்தில்  ஒரே மொழி, ஒரே கலாசாரம் ஒரே விதமான செயல்பாடுகளை கொண்டு வர சிலர் போராடி வருகிறார்கள். அவற்றை நாம் எதிர்த்து போராடி வருகிறோம். பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழியையோ கலாசாரத்தையோ ஏற்றுக்கொள்வதாக தெரியவில்லை. 

தமிழ் மொழி, கலாசாரம், வாழ்க்கை முறையை அவர் இரண்டாவது பட்சமாக கருதுகிறார். நாட்டில் தமிழக மக்களை இரண்டாம் தரக்குடி மக்களாக கருதுகிறார். ஆனால் இந்தியாவில் பல்வேறு விதமான கலாசாரம், மொழி, வாழ்க்கை முறை இருக்கிறது. தமிழ், இந்தி, பெங்காலி போன்ற பல்வேறு விதமான மொழிகள்  உள்ளன. அனைத்து மொழிகளுக்கும் சமமான உரிமை இருக்கிறது என நாங்கள் நம்புகிறோம்.  நமக்கும் பிரதமர் மோடிக்கும் உள்ள முக்கிய வேறுபாடு இதுதான். 

நாட்டின் பெரிய தொழில் அதிபர்களாக உள்ள தனது சில நண்பர்களின் வாழ்க்கைக்காக மட்டுமே பிரதமர் மோடி பாடுபடுகிறார்.

இந்திய மக்களுக்கான அனைத்து வளங்களையும் அவர் விற்க தயாராகி விட்டார். விவசாயிகளின் உரிமைகளை 3 புதிய வேளாண் சட்டங்கள் மூலமாக பறிக்கிறார். இந்தியாவில் உள்ள விவசாயிகளை பெரும் தொழில் அதிபர்களுக்கு வேலைக்காரர்களாக மாற்றுகிறார். அதனால் தான் நாங்கள் பா.ஜ.க.வை எதிர்க்கிறோம், விவசாயிகள் பக்கம் நிற்கிறோம். இந்தியாவில் தமிழ்நாடுதான் எந்த ஒரு மாற்றத்திற்கும் முன்னுதாரணமாக இருந்து வருகிறது. இந்தியாவுக்கு சிறந்த தொழில் அமைப்புகள் தேவைப்படுகின்றன. வேலைவாய்ப்பு தேவைப்படுகிறது. கடந்த காலங்களில் தமிழகம் தொழில்துறையில் சிறந்து விளங்கி உள்ளது. இந்தியா தமிழக மக்களிடம் இருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. தமிழக இளைஞர்கள் துரதிருஷ்டவசமாக வேலைவாய்ப்பு பெற முடியாமல் இருக்கின்றனர். அதே போல் தமிழக விவசாயிகளும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதனால் தான் தமிழக மக்கள் புதிய வாழ்க்கை முறையும், புதிய அரசாங்கத்தையும் விரும்பிக்கொண்டிருக்கின்றனர். 

சிறு, குறு தொழில் செய்பவர்களின் சிரமத்தை புரிந்து கொள்வதற்காக நான் இங்கே வந்துள்ளேன். சிறு, குறு தொழில் செய்பவர்கள், விவசாயிகள், மாணவர்கள் அவர்களின் பிரச்னை என்ன? எவ்வாறு சரிசெய்ய முடியும்? என்பதை தெரிந்து கொள்ள வந்திருக்கிறேன் என்றார்.

இதையடுத்து கோவை சுகுணா திருமணமண்டபத்தில் நடைபெற்ற தொழில் அமைப்புகளின் கலந்துரையாடலில் கலந்து கொண்ட ராகுல் காந்தி,  அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

SCROLL FOR NEXT