தமிழ்நாடு

நகை அடகுக்கடை தொழிலாளியிடம் வழிப்பறி: 3 பேர் கைது

23rd Jan 2021 08:45 AM

ADVERTISEMENT

 

அவிநாசி: பெருமாநல்லூர் அருகே நகை அடகுக்கடை தொழிலாளியிடம் தங்கநகை, செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற 3 பேரை போலீசார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

பெருமாநல்லூர் அருகே மொய்யாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் மதியழகன் (33). நகை அடகுக்கடை தொழிலாளி. 

இந்நிலையில் இவர், கடந்த வாரம் பெருமாநல்லூர் அருகே இருசக்கர வானத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். வள்ளிபுரம் அருகே சென்றபோது இருசக்கர வாகனத்தை வழிமறித்த மர்ம  நபர்கள் 3 பேர், மதியழகன் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலி, செல்லிடப்பேசி உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றர். இது குறித்து பெருமாநல்லூர் போலீசார் தனிப்படை அமைத்து, இவ்வழக்கில் தொடர்புவர்களை தேடி வந்தனர். 

ADVERTISEMENT

இதற்கிடையில், வழக்கில் தொடர்புடையவர்கள் மதுரை பகுதியில் இருப்பதாக அறிந்த போலீசார், அங்கு தலைமறைவாக இருந்த பெருமாநல்லூர் அருகே குன்னத்தூர் ஆதியூர் சாலை காமராஜர் வீதியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் தவசி(19). மதுரை தாத்தாநெறி, நேரு வீதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் வாசிம் ராஜா(21), மதுரை தாத்தா நெறி, பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த அபுதாஹீர் மகன் இம்ரான் கான் உசேன்(24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

மேலும் இவரிகளிடமிருந்து ஒன்றரை பவுன் தங்கச்சங்கிலி, செல்லிடப்பேசி ஆகியவை பறிமுதல் செய்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT