தமிழ்நாடு

7 பேரை விடுவிப்பதே அரசின் நிலைப்பாடு: ஓ.பி.எஸ்.

23rd Jan 2021 01:56 PM

ADVERTISEMENT

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே அரசின் உறுதியான நிலைப்பாடு என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சிறையிலிருந்து விடுவிக்க சட்டப்பேரவையில் முதலில் அறிவித்தது அதிமுக அரசுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநருக்கு பரிந்துரை செய்ததும் அதிமுக அரசுதான் என்று ஓ.பன்னீர் செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

ADVERTISEMENT

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக மாநில ஆளுநரே 3 அல்லது 4 நாள்களில் முடிவெடுப்பார் என்று கடந்த 21-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை இனியும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

Tags : ஓ.பன்னீர் செல்வம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT