தமிழ்நாடு

ஓமலூரில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி

23rd Jan 2021 03:32 PM

ADVERTISEMENT

 

ஓமலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 935 விலையில்லா மிதிவண்டிகளை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் வழங்கினார்.

சேலம் மாவட்டம், ஓமலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு 925 விலையில்லா மிதிவண்டிகளை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் வழங்கினார். 

இதில் ஓமலூர், பனங்காட்டூர், தொளசம்பட்டி, அமரகுந்தி உள்ளிட்ட 6அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 935 விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி உரையாற்றினார். மிதிவண்டி வழங்கல் விழாவில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வழங்கிய 7.5 சதவீதம் மருத்துவ ஒதுக்கீட்டில் இந்த பள்ளி மாணவன் உட்பட இரண்டு மருத்துவ மாணவர்கள் சேர்ந்துள்ளது பெருமை அளிப்பதாகவும், பள்ளி மாணவ மாணவிகளுக்குப் படிப்பை மட்டுமே சொல்லி வரவேண்டாம், அவர்களின் திறமைக்கு ஏற்ப விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்க உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், சேர்மேன் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் அசோகன், ராமசாமி, மணி, தளபதி உள்ளிட்ட மாணவர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT