தமிழ்நாடு

அவனியாபுரத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி கொலை

23rd Jan 2021 11:18 AM

ADVERTISEMENT


அவனியாபுரத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை பொட்டபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அழகுமலை(55) இவர் மேல அனுப்பானடி துணை மின் நிலையத்தில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வந்தார். 

இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை மின் வாரிய வளாகத்தில் தலையில் பலத்த காயத்துடன் அழகுமலை இறந்து கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த அவனியாபுரம் போலீசார், அழகுமலை உடன் பணியாற்றிய மின்பாதை ஆய்வாளர் பிச்சை என்பவரை  கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

Tags : murder Electricity contract worker
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT