தமிழ்நாடு

பெண்கள் பாதுகாப்புக்கு மாவட்டந்தோறும் நீதிமன்றம்: ஸ்டாலின் உறுதி

23rd Jan 2021 03:33 PM

ADVERTISEMENT

 

திருத்தணி: பெண்கள் பாதுகாப்புக்கு மாவட்டந்தோறும் நீதிமன்றம் அமைக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட அம்மையார்குப்பம் கிராமத்தில் திமுக சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. 

திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து பெருந்திரளான பெண்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பின்றி பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துள்ளததாகவும், திமுக ஆட்சி அமைந்ததும் பெண்களுக்கு சுதந்திரம், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு  மாவட்டத்திற்கு ஒரு நீதிமன்றம் அமைக்கப்பட்டு பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்க உறுதி செய்யப்படும் என்றார்.

ADVERTISEMENT

மேலும், தேர்தலுக்கு ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், அதிமுக அரச  பொது மக்களின் வரிப்பணத்தின் மூலம் ரூபாய் ஆயிரம் கோடி செலவில் செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களுக்கு விளம்பரங்களை வாரி வழங்கி விளம்பரம் தேடி வருவதாக குற்றம் சாட்டினார். கடந்த திமுக ஆட்சியின்போது அனைவருக்கும் சுகாதாரம், மருத்துவ வசதிகள் கிடைக்கும் வகையில் கிராம பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டு முறையான மருத்துவர்கள்,  மருத்துவ உபகரணங்கள் உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்ததாகவும், இருப்பினும் தேர்தலுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு மக்களை ஏமாற்றும் வகையில் தமிழகம் முழுவதும் இரண்டாயிரம் மினி கிளினிக்  திட்டத்தை முதல்வர் பழனிமி  அறிவித்தார். மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராமல் மினி கிளினிக் திட்டம் தொடங்கப்படுவதை  கேள்வி கேட்பதாகவும் இந்நிலையில் இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தனிநபர் ஒருவர் மினி கிளினிக்  திட்டம் தொடர்பாக வழக்கில்  தமிழக அரசின் வழக்கறிஞர் மினி கிளினிக் என்பது ஒரு தற்காலிகமான திட்டம் மட்டுமே என்றும் அதற்காக தனியாக மருத்துவர்கள், மருத்துவ காரணங்கள் ஏதும் ஒதுக்கப்படவில்லை என்று தெரிவித்ததன் மூலம் அத் திட்டம் மோசடி திட்டம் என்று நாட்டு மக்களுக்கு வெட்டவெளிச்சமானதாக தெரிவித்தார். 

திமுக ஆட்சி அமைந்ததும் கிராமப்புற மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி கற்க சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும் குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி கற்க  நீட் கல்விமுறையை தமிழகத்தில் அமல்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

நெசவாளர்  வாழ்வாதாரம் மேம்பட திருத்தணி மையமாகக் கொண்டு நெசவாளர் பூங்கா அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் மர்மத்தில் இருக்கும் சந்தேகங்களை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தப்படும். திமுக ஆட்சி மீது உடனடியாக முழுமையான விசாரணை மேற்கொண்டு ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நாட்டுமக்கள் தெளிவுபடுத்தப்படும். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில்  உதயசூரியன் நிச்சயம் உதிக்கும் என்று பேசினார்.  

நிகழ்ச்சியில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினராகத் எஸ்.ஜகத்ரட்சகன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி, திருவள்ளூர் உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி நகர திமுக பொறுப்பாளர் வினோத் குமார், திருத்தணி ஊராட்சி ஒன்றிய செயலாளர் ஆர்த்தி ரவி, அம்மையார்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செங்குட்டுவன்  உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் .
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT