தமிழ்நாடு

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்: ராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள்

23rd Jan 2021 07:41 AM

ADVERTISEMENT

 

மாணவர்களை விடுதியை விட்டு வெளியேற்றி உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை பறிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி நிர்வாகம் மீது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். 

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில், பிற அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் ஒப்பிடுகையில் 30 மடங்கு வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், எனவே, கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவ, மாணவிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை கடந்த புதன்கிழமை (ஜன.20) மாணவா்கள் தொடங்கினா். 

ADVERTISEMENT

இதையடுத்து, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறையை பல்கலை. நிா்வாகம் அறிவித்தது. மேலும், வியாழக்கிழமை மாலை 4 மணிக்குள் விடுதி, கல்லூரி வளாகத்தை விட்டு மாணவ, மாணவிகள் வெளியேறவும் உத்தரவிட்டது.

இதையடுத்து, மருத்துவ மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை மாலை விடுதி முன் அமா்ந்து தா்னா போராட்டத்தைத் தொடங்கினா். வெள்ளிக்கிழமை காலையிலும் மாணவா்கள் தா்னாவை தொடா்ந்தனா். விடுதி உணவகம் மூடப்பட்டதால், மாணவா்கள் காலி தட்டுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், கல்லூரி நிர்வாகம் மாணவர்களை விடுதியை விட்டு வெளியேற்றி உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை பறிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். 

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி விடுதி முன் காலி தட்டுகளுடன் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்ட மாணவா்கள்.

Tags : Raja Muthiah Government Medical College  studentsprotest protest
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT