தமிழ்நாடு

கோவையில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் முதல்வர் பழனிசாமி

23rd Jan 2021 10:31 AM

ADVERTISEMENT


கோவை: கோவையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். 

தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக கோவைக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கோவை தொழில்முனைவோருடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். 

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து சனிக்கிழமை காலையில் கோவை கோனியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரசாரத்தைத் தொடங்கிய அவர் கோவை தெற்கு, தொண்டாமுத்தூர் தொகுதிகளுக்குள்பட்ட ராஜவீதி, செல்வபுரம், குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

செல்வபுரம் பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

 

Tags : கோவை Chief Minister Palanisamy தேர்தல் பிரசாரம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT