தமிழ்நாடு

எடப்பாடியில் பிரதானக் குடிநீர் குழாயில் உடைப்பு: குடிநீர் விநியோகம் பாதிப்பு

23rd Jan 2021 05:25 PM

ADVERTISEMENT

 

எடப்பாடி கூட்டுக்குடிநீர் திட்டப் பிரதானக் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், அப்பகுதியில் குடிநீர் விநியோகிக்கும் பணி பாதிப்பிற்குள்ளானது.

எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் பாயும் காவிரி ஆற்றிலிருந்து, நீர் உந்து நிலையங்கள் வாயிலாக தண்ணீர் எடுக்கப்பட்டு, அங்குள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பெரிய அளவிலான குழாய்கள் வழியாக. எடப்பாடி நகரம், கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து செல்லப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், எடப்பாடி - சேலம் சாலையின் நடுவே பதிக்கப்பட்ட பிரதானக் குடிநீர் குழாயில், அண்மையில் திடீர் வெடிப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் குழாயிலிருந்து வெளியேறிய குடிநீர் அதிக அளவில் சாலையில் ஆறாக ஓடியது. மேலும் சாலையில் தேங்கியுள்ள தண்ணீர், வெடிப்பு வழியாக பிரதான குழாயினுள் செல்லும் சூழல் நிலவிவந்ததை அடுத்து, குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் பல்லம் தொண்டி, குழாயில் ஏற்பட்ட பழுதினை சீர்செய்திடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

ADVERTISEMENT

இதனால் இப்பிரதான குழாய் வழியாக குடிநீர் வினியோகம் நடைபெற்றுவந்த பகுதிகளில், குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் குழாய் சீர்செய்திடும் பணி முழு அளவில் நிறைவடைந்ததும், வழக்கம்போல் குடிநீர் விநியோகம் நடைபெறும் என சமந்தப்பட்டதுறை அலுவலர்கள் கூறினர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT