தமிழ்நாடு

பெருகவாழ்ந்தானில் அழுகிய நெல் பயிர்களுடன் விவசாயிகள் சாலைமறியல்

23rd Jan 2021 03:43 PM

ADVERTISEMENT

 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பெருகவாழ்ந்தான் பகுதிகளில் அண்மையில் பெய்த தொடர் கனமழையால் வயல்களில் மழை நீர் தேங்கி நின்றதால், அறுவடைக்குத் தாயராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்து அழுகியது.

இதனால், விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி காப்பீடு நிறுவனம் பயிர் இழப்புக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும். அதற்கான பயிர் சேதக் கணக்கெடுப்பினை உடனடியாக தொடங்க வேண்டும். பயிர்ச்சேதம் குறித்து வருவாய்த்துறை வேளாண்மைத்துறை இணைந்து கள ஆய்வு செய்து அதன் பேரில் தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் நடைபெற்றது.

பெருகவாழ்ந்தானில் மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுடன் இழப்பீடு,  நிவாரணம் கேட்டு சாலை மறியலில் ஈடுப்பட்ட விவசாயிகள்.

பெருகவாழ்ந்தான் கடைவீதியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு கோட்டூர் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் ஜிகே அண்ணாதுரை தலைமை வகித்தார். ஒன்றிய குழு முன்னாள் துணைத் தலைவர் வி.எஸ்.ஆர். தேவதாஸ் முன்னிலை வகித்தார். இதில் பெருகவாழ்ந்தான் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள், மழையால் அழுகிப் போன நெல் பயிர்களுடன் கலந்துகொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். 

ADVERTISEMENT

இதுகுறித்து, தகவலறிந்து போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்த கோட்டூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தங்கபாண்டியன் பெருகவாழ்ந்தான் காவல் ஆய்வாளர் ஹேமலதா ஆகியோர் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது . இதனால், ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.
 

Tags : farmers
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT