தமிழ்நாடு

குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை

22nd Jan 2021 11:23 AM

ADVERTISEMENT


திருச்சியில் குடும்பத் தகராறில் மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவரைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

திருச்சி, தில்லைநகர் 7 ஆவது குறுக்குத்தெரு, அருகே செங்குளத்தான் கோவில் தெருவில் வசித்து வருபவர் தவசீலன் (27). தில்லைநகர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் புரோட்டா மாஸ்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். 
கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (22) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சாய் பிரசாத் (5) என்ற மகனும்  கவிநிலா (2) என்ற மகளும் உள்ளனர். 

அண்மைக் காலமாக ராஜேஸ்வரி அடிக்கடி யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டிருந்ததை கவனித்த தவசீலன், மனைவி மீது சந்தேகம் கொண்டுள்ளார். எனவே கடந்த சில நாள்களாக மன்னார்குடியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிடலாம் என் கூறி மனைவியிடம் தகராறும் செய்து வந்துள்ளதாக அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு மது, போதையில் வீட்டுக்கு வந்த தவசீலன், மனைவி ராஜேஸ்வரியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

ADVERTISEMENT

பின்னர் இவர்களது வீட்டின் அருகில் உள்ள ராஜேஸ்வரியின் உடன்பிறந்த சகோதரி சகுந்தலா மற்றும் அவரது குடும்பத்தினர் இருவரையும் சமாதானம் படுத்தி பின்னர் உறங்கச் சென்றனர். 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை துணி துவைப்பதற்காக வெளியே வந்த சகுந்தலா, தனது சகோதரி ராஜேஸ்வரி வீட்டில் இருந்து பாடல் சத்தம் அதிக அளவில் கேட்டுக்கொண்டிருந்துள்ளது. மேலும் வீட்டின் வெளிப்புற தாப்பாள் போடப்பட்டிருந்துள்ளது, இதனால் சந்தேகமடைந்த அவர் கதவைத் திறந்து பார்த்தபோது, அங்கு ராஜேஸ்வரி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த
அவர் உடனடியாக தில்லை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இது குறித்து தில்லை நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜேஸ்வரி மகன் சாய் பிரசாத் போலீசாரிடம் கூறுகையில், தனது தாயை தந்தை (தவசீலன்) கட்டையால் அடித்தும், கழுத்தை நெரித்ததாகவும் கூறியுள்ளார்.

Tags : murder trichy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT