தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வருஷாபிஷேக விழா

22nd Jan 2021 12:58 PM

ADVERTISEMENTஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. மகா சாந்தி ஹோமத்துடன் துவங்கிய இந்த வருஷாபிஷேக விழா சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மொத்தம் மூன்று நாள்கள் நடைபெறுகிறது. 

முதல் நாளான வெள்ளிக்கிழமை மகா சாந்தி ஹோமமும், சனிக்கிழமை 108 கலச அபிஷேகமும், ஞாயிற்றுக்கிழமை ஏகதின லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

இந்த வருஷாபிஷேக விழா ஆண்டாள் கோவில் நுழைவாயிலில் யானை கால் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது

ADVERTISEMENT

யானை கால் மண்டபத்தில் வைத்து நடைபெறும் வருஷாபிஷேக விழா

வருஷாபிஷேக விழா முன்னிட்டு ஆண்டாளுக்கும் ரெங்க மன்னருக்கும் பல்வேறு சிறப்பு பூஜைகளும் தீபாராதனை நடைபெற உள்ளன.

இந்த மூன்று நாள்கள் பூஜையிலும் ஆண்டாள் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவதால் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags : Varushabhishekam Srivilliputhur Andal Temple Andal Templex
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT