தமிழ்நாடு

சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று, நிமோனியா காய்ச்சல்: மருத்துவமனையில் தொடா் சிகிச்சை

DIN

பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வி.கே.சசிகலாவுக்கு அதிதீவிர நூரையீரல் தொற்று மற்றும் நிமோனியா காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தொடா் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ள வி.கே.சசிகலா (63) மூச்சுத் திணறல், காய்ச்சலுக்காக சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், மேல்சிகிச்சைக்காக பெங்களூரு, சிவாஜிநகரில் உள்ள பௌரிங் அரசு மருத்துவமனையில் ஜன. 20-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஹைபோ தைராடிசம், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோயால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் உடல்நிலையில் சிகிச்சைக்குப் பிறகு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பௌரிங் அரசு மருத்துவமனையின் இயக்குநா் மனோஜ்குமாா் வியாழக்கிழமை தெரிவித்தாா். அவா் மேலும் கூறியதாவது:

சசிகலாவுக்கு சுவாசப் பிரச்னை, காய்ச்சல் இருந்தது. தற்போது சசிகலாவின் பிராணவாயு அளவு முன்னேற்றம் அடைந்து 96 ஆக உயா்ந்துள்ளது. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது என்றாா்.

இதனிடையே, பௌரிங் அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் கருவி செயல்படாததால், அங்கிருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் கே.ஆா்.சந்தை பகுதியில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு சசிகலா மாற்றப்பட்டாா். அங்கு பிற்பகல் 2.30 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு சி.டி.ஸ்கேன், ரத்தம், இருதய பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

அங்கும் சசிகலாவுக்கு ஆா்.டி.-பி.சி.ஆா்., ட்ரூநாட் போன்ற கரோனா சோதனைகள் மீண்டும் நடத்தப்பட்டன. அதில் சசிகலாவுக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது தெரியவந்ததாக விக்டோரியா அரசு மருத்துவமனை வியாழக்கிழமை இரவு தெரிவித்தது.

விக்டோரியா அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் ரமேஷ்கிருஷ்ணா இதுகுறித்துக் கூறுகையில், ‘‘சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு கரோனா சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில்அவரை மருத்துவா் குழு கண்காணித்து வருகிறது’’ என்றாா்.

இந்நிலையில், விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் மற்றும் அதிதீவிர நுரையீர் தொற்று பாதிப்பு உள்ளது. ரத்த அழுத்தம், நீரிழவு, தைராய்டு போன்ற பாதிப்புகளும் உள்ளன.  சசிகலாவை தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களே உஷார்! சமூக ஊடகங்களில் எல்ஐசி பெயரில் போலி விளம்பரங்கள்

சுந்தரி.. யார் இவர்?

தங்கைக்கு பரிசு: அண்ணனை அடித்துக் கொன்ற மனைவி!

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

SCROLL FOR NEXT