தமிழ்நாடு

திருச்சி விமான நிலையத்தில் ரூ.35.9 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

22nd Jan 2021 12:21 PM

ADVERTISEMENT

 

திருச்சி விமான நிலையத்தில் ரூ.35.9 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா்.

சிங்கப்பூரில் இருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத் துறையினா் சோதனை செய்தபோது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த அருண்பாண்டி என்பவர், தனது உடமைகளுக்குள் மறைத்து கடத்தி வந்த 8 லட்சம் ரூ. மதிப்பிலான 158 கிராம் தங்கம், புதுக்கோட்டையைச் சேர்ந்த துரைசாமி என்பவர் கடத்தி வந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 188 கிராம் தங்கம், பெரம்பலூரைச் சேர்ந்த சத்யராஜ் என்பவர் கடத்தி வந்த ரூ. 8.12 லட்சம் மதிப்பிலான 168 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

அதே போல சார்ஜாவில் இருந்து வந்த திருச்சியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரிடமிருந்து ரூ.9.41 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தையும் பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ. 35.9 லட்சம் மதிப்பிலான 690 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : gold seized Trichy airport
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT