தமிழ்நாடு

கர்நாடகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி குட்கா பொருள்கள் பறிமுதல்

22nd Jan 2021 12:39 PM

ADVERTISEMENT


கர்நாடகத்தில் இருந்து ஆற்காட்டுக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்புடைய 8.5 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக லாரி ஓட்டுநா், உதவியாளா் ஆகியோா் கைது செய்துள்ளன.

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனைச்சாவடியில் போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குற்றத்தடுப்பு போலீசாருக்கு கிடைத்த தகவலயைடுத்து மண்டல போதை பாக்கு குற்றத்தடுப்பு போலீசார் பண்ணாரி சோதனைச்சாவடிக்கு விரைந்து சென்று உள்ளூர் போலீசாருடன் சோதனையில் ஈடுபட்டனர். 

ADVERTISEMENT

இரு மாநில எல்லையான கொள்ளேகால் ஹானூரில் இருந்து மக்காச்சோலம் பாரம் ஏற்றிய லாரி திம்பம் வழியாக கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. பண்ணாரி சோதனைச்சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது மக்காச்சோளம் மூட்டையில் மாறுபட்ட வாசனை வருவது கண்ட போலீசார், சந்தேகத்தின்பேரில் ஓட்டுநர் காந்தராஜ், உதவியாளர் ரமேஷிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின்னாக பதிலளித்தால் லாரியை சோதனையிட்டதில் மாக்காசோள மூட்டைக்குல் பான்மசாலா பாக்குகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து ஓட்டுநர், உதவியாளரை கைது செய்து சத்தியமங்கம் காவல்நிலையத்துக்குஅழைத்து சென்றனர். 

லாரியில் இருந்து பொருள்களை இறக்கி சோதனையிட்டதில் ரூ.1 கோடி மதிப்பிலான 8.5 டன் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு ஓட்டுநர் காந்தராஜ், உதவியாளர் ரமேஷ் இருவரையும் கைது செய்து ரூ.1 கோடி மதிப்பிலான  குட்கா புகையிலை பொருள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக லாரி ஓட்டுநா், உதவியாளா் ஆகியோா் கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

Tags : Gutka seized 8.5 tonnes gutka seized
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT