தமிழ்நாடு

4 மீனவர்கள் படுகொலை: இத்தாலிய வீரர்களைப் போல சிங்களக் கடற்படை வீரர்களையும் கைது செய்ய வேண்டும்

DIN

4 மீனவர்கள் படுகொலை விவகாரத்தில் இத்தாலிய வீரர்களைப் போல சிங்களக் கடற்படை வீரர்களையும் கைது செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 4 பேர் சிங்களக் கடற்படையினரால் கொடுமைப் படுத்தப்பட்டு, கடலில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடக்கூடிய இந்தத் தாக்குதல் சம்பவத்திற்காக  இலங்கை அரசுக்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் மட்டும் தெரிவித்திருப்பது போதுமானதல்ல.

கடந்த 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி கேரளத்தையொட்டிய கடல் எல்லையில்  மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இத்தாலிய எண்ணெய்க் கப்பலுக்கு காவலாக  வந்த இத்தாலிய கடற்படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் கொல்லப்பட்டனர். இதற்காக இத்தாலிய வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இப்போதும் அவர்கள் மீதான வழக்கு பன்னாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தமிழக மீனவர்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பீடு வழங்கப்படவுள்ளது. அது தவிர, நல்லெண்ண உதவியாக மீனவர்கள் குடும்பங்களுக்கும் ரூ 1 கோடி நிதியுதவி வழங்கவும் இத்தாலி அரசு முன்வந்தது.

அதேபோல், இந்த வழக்கிலும் மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான சிங்களக் கடற்படையினரை கைது செய்ய வேண்டும். இலங்கை அரசிடமிருந்து இரு மீனவர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 கோடி கோடி இழப்பீடு பெற்றுத் தருவதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

தோட்டிக்கோடு ஸ்ரீ மெளனகுருசுவாமி கோயிலில் சித்திரை பெளா்ணமி பூஜை

நாகா்கோவிலில் கஞ்சா பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது

நாமக்கல்லில் இன்று வெப்ப அலை வீசும்: ஆட்சியா் எச்சரிக்கை

பாலூா் ஊராட்சியில் சீரான குடிநீா் வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT