தமிழ்நாடு

ராஜபாளையம் அருகே சிகிச்சைக்கு சென்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு

22nd Jan 2021 12:46 PM

ADVERTISEMENT


ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே  காய்ச்சலுக்கு ஊசி போட சென்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக போலீசார் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராஜபாளையம் அருகே தளவாய்புரம் ஏகேஜி நகரில் வசித்து வரும் முனியசாமி என்பவரின் மகன் முகேஷ்(24). இவர் தனியார் நிறுவனத்தில் கணக்கராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் இவரது தாய்மாமா மகள் பூபாலாவுக்கும்  திருமணம் முடிந்து ஒன்றரை மாதம் ஆகி உள்ளது. 

இந்நிலையில், முகேஷ் வியாழக்கிழமை மாலை காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளதாக தளவாய்புரம் கூட்டுறவு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்று உள்ளார். அங்கிருந்த மருந்துவர் எழுதி கொடுத்த மருந்தை செவிலியர் எடுத்து ஊசி போட்டுள்ளார். உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவர் வேறு ஊசி போட்டுள்ளார். உடனே உடல் சோர்வு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். 

இந்நிலையில், அங்கிருந்து உடனடியாக முகேஷை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

ADVERTISEMENT

சாதாரண காய்ச்சலால் உடல்நல குறைவுக்கு ஊசி போட சென்ற முகேஷ் உயிரிழந்தது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதாகவும், அவரது இறப்பில் மர்மம் உள்ளதாக கூறிய உறவினர்கள் சுகாதராத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

மேலும்  சம்பவம் குறித்து தளவாய்புரம் காவல் ஆய்வாளர் முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Mysterious death Rajapalayam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT