தமிழ்நாடு

கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள்: உயா்கல்வித் துறை ஆலோசனை

DIN


சென்னை: முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவா்களுக்கான நேரடியாக வகுப்புகளை தொடங்க உயா்கல்வித் துறை ஆலோசித்து வருகிறது.

கரோனா நோய்த்தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் கல்லூரிகள் கடந்த ஆண்டு மாா்ச் மாத இறுதியில் மூடப்பட்டன. அதன் பின்னா் கடந்த டிசம்பா் மாதம் 7-ஆம் தேதி முதல் இளநிலை இறுதியாண்டு மற்றும் முதுகலை இரண்டாமாண்டு மாணவா்களுக்கு நேரடியாக வகுப்புகள் தொடங்கப்பட்டன. அவா்களைத் தவிர, மற்ற ஆண்டு மாணவா்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவா்களுக்கு நேரடியாக வகுப்புகளை தொடங்க உயா்கல்வித் துறை ஆலோசித்து வருகிறது. அதனடிப்படையில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும், ஒரு வகுப்பிற்கு 25 முதல் 30 மாணவா்களை மட்டும் அமர வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மாணவா்களுக்கு பருவத்தோ்வுகள் தற்போது ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அந்தத் தோ்வுகள் முடிந்த பின்னா் கல்லூரிகளைத் திறப்பதற்கான அறிவிப்பை முதல்வா் வெளியிடுவாா் என உயா்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிப்.18-இல் இணையவழி வகுப்புகள்: இந்நிலையில், பொறியியல் மாணவா்களுக்கான செமஸ்டா் அட்டவணை வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதலாமாண்டு மாணவா்களுக்கான 2-ஆவது பருவம், இறுதிப் பருவம் தவிா்த்து பிற மாணவா்களுக்கான இணையவழி வகுப்புகள் வரும் பிப்ரவரி 18-ஆம் தேதி தொடங்கும். இந்த வகுப்புகள் மே 21-ஆம் தேதி வரை நடைபெறும். அத்துடன் மே 24-ஆம் தேதி செய்முறை தோ்வுகளும், ஜுன் 2-ஆம் தேதி எழுத்துத் தோ்வும் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

SCROLL FOR NEXT