தமிழ்நாடு

கோவையில் ஜன.24-ஆம் தேதி முதல்வர் பழனிசாமி சுற்றுப் பயணம்

22nd Jan 2021 11:47 AM

ADVERTISEMENT

 

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கோவை மாவட்டத்தில் ஜனவரி 24-ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தோ்தல் பிரசார பொதுக்கூட்டங்கள் மற்றும் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா்.

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கோவை மாவட்டம் புலியகுளம் பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் காலை 8 மணிக்கு பிரசாரத்தை தொடங்குகிறாா். அங்கு நடைபெறும் தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா். பின்னா் காலை 9 மணிக்கு சிங்கநல்லூரில் தேர்தல் பிரசாரத்தில் பேசுகிறார்.

தொடர்ந்து, ரொட்டி கடை மைதானம், காளப்பட்டி, அன்னூர், மேட்டுப்பாளையம், ரங்கநாதர் கோயில் பகுதிகளிலும் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.

ADVERTISEMENT

மதிய ஓய்வுக்குப் பின், 3.20 மணிக்கு பெரியநாயக்கன்பாளையத்திலும், அடுத்தடுத்து துடியலூர், கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள சாய்பாபாகோவில், வடவள்ளி, தொண்டாமுத்தூர், பெரிய குளம் பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

இரவு 7.35 மணிக்கு கொடிசியா மைதானத்தில் தொழில் துறையினர், ஊர் பெரியோர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் முதல்வர் பழனிசாமி பங்கேற்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags : Palanisamy tn cm election
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT