தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பள்ளிகளில் மிதிவண்டி வழங்கும் விழா

22nd Jan 2021 01:48 PM

ADVERTISEMENT


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கும்மிடிபூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட கும்மிடிப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கும்மிடிப்பூண்டி கே.எல்.கே ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கும்மிடிப்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி, கவரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாதர்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி, அச்சமநாயுடு கண்டிகை அரசு மேல்நிலைப்பள்ளி, எளாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, சுண்ணாம்புகுளம் அரசு மேல் நிலைப்பள்ளி,ஆரம்பாக்கம் அரசு மேல் நிலைப்பள்ளி, ஆரம்பாக்கம் செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி  ஆகிய 11 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும்  917  மாணவர்கள், 989 மாணவிகள் உள்ளிட்ட 1906 பேருக்கு  தமிழகஅரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

நிகழ்விற்கு பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் சு.கார்த்திகேயன் வரவேற்றார்.

கும்மிடிப்பூண்டி  அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு  கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே எஸ் விஜயகுமார் தலைமை தாங்கி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி தமிழக அரசின் சலுகைகளை உரிய முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வாழ்த்தினார்.

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழு தலைவர் கே.எம்.எஸ். சிவகுமார் வாழ்த்துரை வழங்குவது தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தில் பெண்கல்வி உயர்ந்துள்ளது என குறிப்பிட்டார்.

இவ்விழாவில் அதிமுக நகர செயலாளர் மு.க.சேகர்,  மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் இமயம் மனோஜ், துணை செயலாளர் சஞ்சனா விஜயகுமார், தன்ராஜ், டி.சி.மகேந்திரன், ரமேஷ்குமார், ஓடை ராஜேந்திரன், எஸ்.டி.டி.ரவி,  நகர இலக்கிய அணி செயலாளர் எம்.ஏ.மோகன், புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி தலைவர் டாக்டர் அஷ்வினி சுகுமாறன், துணை தலைவர் எம்.எல்லப்பன், விஸ்வநாதன், தமிழ்வாணன், ராஜா, ஜோதி,எம்.எஸ்.எஸ்.சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழா முடிவில் உதவி தலைமை ஆசிரியர் ஏ.பிரபாகரன் நன்றி கூறினார்.

Tags : Bicycle distribution Gummidipoondi Panchayat Union
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT