தமிழ்நாடு

குடியரசு நாள் விழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு

22nd Jan 2021 10:54 AM

ADVERTISEMENT

சென்னை: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு திருநாள் விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், குடியரசு நாள் விழாவின் போது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு கௌரவம் அளிக்கப்படும். அதற்கு மாறாக, சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று ஆட்சியர்கள் உரிய மரியாதை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு திருநாள் விழாவைப் பார்க்க பொதுமக்கள் வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்தியக் குடியரசு திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் ஜனவரி மாதம் 26-ஆம் நாள் காலை 8.00 மணிக்கு ஆளுநர் தேசியக் கொடியினை ஏற்றி சிறப்பிப்பார்கள். 

ADVERTISEMENT

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நாள் நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளும், பொது மக்களும், மாணவர்களும், பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்பர்.

கரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு, பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. சுதந்திர போராட்ட வீரர்களின் வயது மூப்பினை கருத்தில் கொண்டும், கரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாக மாவட்டந்தோறும் சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொன்னாடை போர்த்தி, உரிய மரியாதை அளித்திட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளி/ஒலி பரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தை தவிர்க்கும் வகையில், இந்தாண்டு, பொது மக்கள், மாணவர்கள் பள்ளிக் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள், விழாவைக் காண நேரில் வருவதை தவிர்க்குமாறு ட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி / வானொலியில், கண்டு / கேட்டு மகிழுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags : Republic Day chennai Marina
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT