தமிழ்நாடு

ஒசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் 25 கிலோ தங்கம் கொள்ளை

DIN


ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பாகலூர் சாலையில் இயங்கி வரும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் 25 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பாகலூர் சாலையில் இயங்கி வரும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு  துப்பாக்கி முனையில் 5 கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேலாளர்  சீனிவாச ராகவ் மாருதி பிரசாத் உள்ளிட்ட அங்கு வேலை செய்தவர்களை தாக்கி கட்டி வைத்துவிட்டு, 25 கிலோ தங்கம், ரூ.96 ஆயிரம் பணம் ஆகியவற்றை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதன் மதிப்பு  ஏழரை கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த கொள்ளைச் சம்பவத்தின் போது, முத்தூட் பைனாஸ் நிறுவனத்தில் பணம் எடுக்க வந்தவர்களும் துப்பாக்கிமுனையில் கை, கால்களை கட்டி வைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒசூர் நகர காவல்துறையினர் முத்தூட் பைனான்ஸ் அலுவலத்தில் பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் மேலாளரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் நிதி நிறுவனம் ஒன்றில், துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் ஓசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT