தமிழ்நாடு

தமி​ழ​க‌ வா‌க்​கா​ள‌ர் எ‌ண்​ணி‌க்கை 6.26 கோடி​யாக அதி​க​ரி‌ப்பு; பெ‌ண்களே அதி​க‌ம்

DIN


சென்னை: தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 26 லட்சமாக உயர்ந்துள்ளது என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
ஜனவரி 1-ஆம் தேதி 18 வயது நிறைவடைந்தவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேர்தல் ஆணையம் வாய்ப்பு வழங்கியது. இதற்காக கடந்த நவம்பர் 16-இல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் பெயர்களைச் சேர்க்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் டிசம்பர் 15-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை அளித்தோரின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்ட இறுதி வாக்காளர் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதுகுறித்து, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்தி: வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க மொத்தம் 21 லட்சத்து 82 ஆயிரத்து 120 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 21 லட்சத்து 29 ஆயிரத்து 395 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்பட்டன. 5 லட்சத்து 9 ஆயிரத்து 307 வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

3 லட்சத்து 32 ஆயிரத்து 743 விண்ணப்பங்கள் திருத்தங்களுக்காகப் பெறப்பட்டதில், 3 லட்சத்து 9 ஆயிரத்து 292 மனுக்கள் ஏற்கப்பட்டன. பேரவைத் தொகுதிக்குள் முகவரி மாறியவர்கள், திருத்தங்களுக்காக 1 லட்சத்து 84 ஆயிரத்து 791 மனுக்களை அளித்திருந்தனர். அவற்றில் 1 லட்சத்து 75 ஆயிரத்து 365 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

6 கோடியே 26 லட்சம்: தமிழகத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்ட இறுதிப் பட்டியலின் அடிப்படையில், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 ஆக உள்ளது. 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 ஆண்களும், 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 பெண்களும் உள்ளனர். மூன்றாம் பாலித்தனவர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 246 ஆக உள்ளது.

அதிகம்-குறைவு எவை?: தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. இந்தத் தொகுதியில் 6 லட்சத்து 94 ஆயிரத்து 845 வாக்காளர்கள் உள்ளனர். குறைவான வாக்காளர்களைக் கொண்ட தொகுதி சென்னை துறைமுகம் தொகுதி. இந்தத் தொகுதியில், 1 லட்சத்து 76 ஆயிரத்து 272 வாக்காளர்கள் உள்ளனர்.

மேலும், 4 லட்சத்து 62 ஆயிரத்து 597 மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் இருப்பதாக  சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

16.30 லட்சம் கூடுதல் வாக்காளர்கள்

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டபோது 6.10 கோடி வாக்காளர்கள் இருந்தனர். திருத்தப் பணிகளுக்குப் பிறகு வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 16.30 லட்சம் பேர் கூடுதலாக இணைந்துள்ளனர். 7 லட்சத்து 26 ஆயிரத்து 103 ஆண்களும், 9 லட்சத்து 3 ஆயிரத்து 124 பெண்களும் கூடுதலாக பெயர்களைச் சேர்த்துள்ளனர்.

பின்தங்கிய துறைமுகம்: தமிழகத்தில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்போது நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியே குறைவான வாக்காளர்களைக் கொண்டதாக இருந்தது. இப்போது, சென்னை துறைமுகம் தொகுதி குறைவான வாக்காளர்களைக் கொண்டதாக மாறியுள்ளது.

இளம் வாக்காளர்கள் 13.09 லட்சம் பேர்

தமிழகத்தில் 18 முதல் 19 வயதுக்கு உட்பட்ட இளம் வயது வாக்காளர்கள் 13 லட்சத்து 9 ஆயிரத்து 311 பேர் உள்ளனர். வயது வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரங்களை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு புதன்கிழமை வெளியிட்டார். அவர் வெளியிட்ட விவரம்:-

18-19 வயது: 13 லட்சத்து 9 ஆயிரத்து 311 பேர் .
20 - 29 வயது: 1 கோடியே 23 லட்சத்து 95 ஆயிரத்து 696 பேர்,
30- 39 வயது:1 கோடியே 38 லட்சத்து 48 ஆயிரத்து 56 பேர் .
40 - 49 வயது: 1 கோடியே 32 லட்சத்து 44 ஆயிரத்து 564 பேர்
50 -59 வயது: 1 கோடியே 3 லட்சத்து 21 ஆயிரத்து 626 பேர் .  
60- 69 : 67 லட்சத்து 23 ஆயிரத்து 232 பேர்.
70 -79 வயது: 35 லட்சத்து 33 ஆயிரத்து 555 பேர். 
80 வயதுக்கு மேற்பட்டோர் 12 லட்சத்து 98  ஆயிரத்து 406  பேர்.


மாவட்ட வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை

திருவள்ளூர்    -    34,98,829
சென்னை    -    40,57,360
காஞ்சிபுரம்    -    13,15,329
வேலூர்    -    12,64,088
கிருஷ்ணகிரி    -    15,99,018
தருமபுரி    -    12,60,909
தி.மலை    -    20,69,091
விழுப்புரம்    -    16,84,504
சேலம்    -    30,04,140
நாமக்கல்    -    14,41,201
ஈரோடு    -    19,57,203
நீலகிரி    -    5,85,049
கோவை    -    30,62,744
திண்டுக்கல்    -    18,73,438
கரூர்    -    8,96,713
திருச்சி    -    23,32,886
பெரம்பலூர்    -    5,75,986
கடலூர்    -    21,41,935
நாகப்பட்டினம்    -    13,41,305
திருவாரூர்    -    10,50,569
தஞ்சாவூர்    -    20,56,548
புதுக்கோட்டை    -    13,48,964
சிவகங்கை    -    11,81,877
மதுரை    -    26,85,671
தேனி    -    11,24,500
விருதுநகர்    -    16,68,751
ராமநாதபுரம்    -    11,57,540
தூத்துக்குடி    -    14,81,799
திருநெல்வேலி    -    13,53,159
கன்னியாகுமரி    -    15,67,627
அரியலூர்    -    5,30,025
திருப்பூர்    -    23,52,785
கள்ளக்குறிச்சி    -    11,13,976
தென்காசி    -    13,38,80
செங்கல்பட்டு    -    27,16,385
திருப்பத்தூர்    -    9,60,858
ராணிப்பேட்டை    -    10,27,804
------------------
மொத்தம்    -    6,26,74,446

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

SCROLL FOR NEXT