தமிழ்நாடு

பதினைந்து நாட்களில் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை: வேளாண்துறை செயலர்

DIN

சென்னை: பதினைந்து நாட்களில் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரிவான கணக்கீடு மற்றும் பயிர் பாதுகாப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பதினைந்து நாட்களில் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வியாழனன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘15 நாட்களில் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பருவம் தவறிய மழையால் பல ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கைகொடுப்பதில் தேர்தலோ, அரசியலோ குறுக்கிடாது; நிச்சயம் அரசு உதவும்’ என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

SCROLL FOR NEXT