தமிழ்நாடு

தொடர் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஊழியர் சங்கம் அறிவிப்பு

DIN

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தப்படும் எனப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் எஸ்.மனோகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: 

அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியர், ஊழியர் மற்றும் ஒய்வூதிய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை செயலர் மற்றும் சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.பாண்டியன், முன்னாள் எம்பி ஏ.அருண்மொழிதேவன், துணைவேந்தர், பதிவாளர் ஆகியோர் முன்னிலையில் கோரிக்கைகள் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. புதிய துணைவேந்தர் 2018-ல் பொறுப்பேற்றவுடன் பல்கலைக்கழக ஆசிரியரல்லாத ஊழியர்களின் கோரிக்கைகள் யாவும் இன்று வரை நிறைவேற்றவில்லை.

பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தொகுப்பூதியம், தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்திரம் செய்ய வேண்டும். பல்கலைக்கழக கடந்த பல ஆண்டு பணிபுரியும் ஆசிரியரல்லாத ஊழியர்களுக்கு பதவி உயர்வுகள் அளிக்க வேண்டும். பணியில் இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கடந்த 10 வருடங்களாக அளிக்கப்படாமல் உள்ள கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை உடனடியாக வழங்க வேண்டும். 

பல்கலைக்கழகத்தில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவமனை ஊழியர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வைத்துள்ளோம். மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தொடர் போராட்டம் நடத்தப்படும். போராட்டம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என எஸ்.மனோகரன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT