தமிழ்நாடு

வைகை அணையில் மத்திய நீர்வளக் குழுவினர் ஆய்வு

DIN


ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் வைகை அணையின் உறுதித் தன்மை குறித்து மத்திய நீர்வளக் குழுவினர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். 
ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை தொடர் மழை காரணமாக தற்போது 70.27 அடியை எட்டியுள்ளது. அணையில் முழுக் கொள்ளளவான 71 அடி வரை தண்ணீர் தேக்க பொதுப்பணித் துறையினர் முடிவு செய்துள்ளனர்.   
இந்நிலையில், வைகை அணையில் மத்திய நீர்வளத் துறை இயக்குநர் நித்தியானந்த ராய், இணை இயக்குநர் இசாலி ஐசக் ஆகியோர் தலைமையிலான குழுவினர் புதன்கிழமை ஆய்வில் ஈடுபட்டனர். 
அணையின் உறுதித் தன்மை குறித்தும், தொடர்ந்து மழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகமாகும் பட்சத்தில் அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்ற கூடுதல் மதகுகள் அமைக்க வேண்டுமா என்பது குறித்தும் அவர்கள் ஆய்வு நடத்தினர். வைகை அணையைப் பொருத்தவரை அதில் உள்ள 14 மதகுகள் வழியாக ஒரே நேரத்தில் 64,000 கன அடி தண்ணீரை வெளியேற்ற முடியும். 
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை அதிகமாக பெய்து 64 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்தால் அணையில் இருந்து அதனை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. 
இதையடுத்து வைகை அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான மூல வைகை ஆறு, வருசநாடு வனப்பகுதி, மேகமலை வனப்பகுதி, பெரியார் ஆறு உள்ளிட்ட பகுதிகளிலும் அக்குழுவினர் ஆய்வு நடத்தினர். 
இந்த ஆய்வில், வைகை அணை உதவி செயற்பொறியாளர் செல்வம், உதவி பொறியாளர் குபேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க வரிசையில் பெற்றோர்கள்: செல்போனில் மூழ்கிய குட்டீஸ்கள்!

வாக்குப்பதிவு மும்முரம்: வெறிச்சோடிய சென்னை மாநகர சாலைகள்!

‘அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே தல’: ரசிகர்கள் வாழ்த்து மழை!

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT