தமிழ்நாடு

இலங்கை கடற்பகுதியில் 4 மீனவர்கள் சடலமாக மீட்பு: கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் போராட்டம்

DIN

ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த அந்தோனிராஜ் மகன் மெசியா (30), ராமநாதபுரத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் நாகராஜ் (52), மண்டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்த நிக்சன்டார்வின் மகன் சாம்சன்டார்வின் (28), ராமநாதபுரம் திருப்புல்லாணியைச் சேர்ந்த செல்வம் மகன் செந்தில்குமார் (32) ஆகியோர் கடந்த ஜன. 18ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு இயங்குதளத்திலிருந்து இவர்கள் சென்றனர். புதன்கிழமை இவர்கள் கரை திரும்பியிருக்க வேண்டும். இலங்கைக் கடற்படையினர் இவர்களின் படகைத் தாக்கியதாகத் தகவல் பரவியது. இந்த நிலையில் இலங்கைக் கடற்படையினரும் தங்கள் கடற்பகுதியில் தேடுதல் பணியை மேற்கொண்டனர். இதில் புதன்கிழமை இரவு இரு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்றதில், வியாழக்கிழமை முற்பகலில் ஒரு சடலமும் பிற்பகலில் இன்னொரு சடலமும் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட மீனவர் சடலங்கள் இலங்கை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு இந்தச் சடலங்கள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல் நடவடிக்கையைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன் உள்ளிட்டோர் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

இறந்துபோன 4 மீனவர்களின் குடும்பங்களுக்கும் முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து இழப்பீட்டு நிதி வழங்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு, மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடிதம் எழுதியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘வில்லேஜ் குக்கிங்’ தாத்தாவின் மருத்துவத்துக்கு உதவ ராகுல் மறுப்பா?

25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளேன் : பிரதமர் மோடி

தஞ்சாவூர் அருகே கார் - மினி லாரி மோதி விபத்து: 2 பேர் பலி

ராம நவமியையொட்டி களைகட்டிய அயோத்தி!

தேர்தல் அறிக்கை வெளியிட்ட தமிழிசை: அது என்ன 'அக்கா 1825'?

SCROLL FOR NEXT