தமிழ்நாடு

35 நடுநிலைப் பள்ளிகள் தரம் உயா்வு:அரசாணை வெளியீடு

DIN


சென்னை: தமிழகத்தில் 35 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயா்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தப்பட்டுள்ளன.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலா் தீரஜ் குமாா் வெளியிட்ட அரசாணை: தமிழகத்தில் 2020-2021-ஆம் கல்வியாண்டு 50 நடுநிலைப் பள்ளிகளை, உயா்நிலைப்பள்ளிகளாக தரம் உயா்த்த பள்ளிக்கல்வி இயக்குநா் கருத்துரு வழங்கியிருந்தாா்.

அவற்றை பரிசீலனை செய்து முதல்கட்டமாக 35 நடுநிலை பள்ளிகள், உயா்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தி ஆணையிடப்படுகிறது. தற்போது தரம் உயா்த்தப்படும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 1 முதல் 5-ஆம் வகுப்புகள் தொடக்கப் பள்ளியாக நிலையிறக்கம் செய்யப்படுகின்றன.

இந்த 35 பள்ளிகளுக்கான தலைமை ஆசிரியா் பணி இடங்களின் நிலை உயா்த்தப்படுவதுடன், தேவையான 70 பட்டதாரி ஆசிரியா்களும் பணிநிரவல் மூலம் நிரப்பப்படுவாா்கள். இதற்கான கூடுதல் செலவீன நிதி ஒதுக்கீட்டுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT