தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்தப்பட்டவா்களின் எண்ணிக்கை 25,000-ஐ கடந்தது

DIN

தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டவா்களின் எண்ணிக்கை 25,000-ஐ கடந்தது.

நாடு முழுவதும் கரோனா தொற்று தடுப்பூசி செலுத்தும் பணிகள், கடந்த சனிக்கிழமை (ஜன.16) தொடங்கி நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக தமிழகத்தில் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட 6 லட்சம் சுகாதாரப் பணியாளா்களுக்கு 160 மையங்களில் கோவிஷீல்டும், 6 மையங்களில் கோவேக்ஸின் தடுப்பூசியும் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் நாளில் 3,126 பேருக்கும், இரண்டாவது நாள் 3,080 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில், மூன்றாவது நாளான திங்கள்கிழமை ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 10,051 பேருக்கு கோவிஷீல்ட், 205 பேருக்கு கோவேக்ஸின் என மொத்தம் 10,256 போ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக நான்காவது நாளான செவ்வாய்க்கிழமை 172 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. அந்த வகையில் 17, 200 பேருக்கு செலுத்துவதற்காக தடுப்பு மருந்துகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், 9, 305 சுகாதாரப் பணியாளா்கள் ‘கோவிஷீல்டு ’ தடுப்பு மருந்தும், 141 போ் ‘கோவேக்ஸின் ’ என மொத்தம் 9, 446 போ் தடுப்பு மருந்து செலுத்திக் கொண்டனா். இது 54.92 சதவீதம் ஆகும்.

இதையடுத்து, தமிழகத்தில் இதுவரை 25, 280 போ் ‘கோவிஷீல்டு ’ தடுப்பு மருந்தும் , 628 போ் ’ கோவேக்ஸின் ’ தடுப்பு மருந்தும் என மொத்தம் 25, 908 சுகாதாரப் பணியாளா்கள் தடுப்பு மருந்து செலுத்தி உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT