தமிழ்நாடு

அருப்புக்கோட்டையில் நாட்டுப்புறக்கலை மூலம் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு

DIN

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் போக்குவரத்துக் காவல் துறையினர் சார்பில் நாட்டுப்புறக் கலைஞர்களின் இசை மற்றும் நடனம் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.  

அருப்புக்கோட்டை நகர் மையத்திலுள்ள ஸ்ரீஅமுதலிங்கேஸ்பரர் கோவிலருகே உள்ள சாலை சந்திப்பில் நடைபெற்ற சிறப்பு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் சரவணக்குமார் தலைமை வகித்தார். அப்போது நாட்டுப்புறக் கலைஞர்களைக் கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த பாடல்களும் மேலும் பொதுமக்களைக் கவரும் வண்ணம் கரகாட்டக் கலைஞர்களின் நடனத்துடன் கூடிய பலவித சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

மேலும் அக்கலைஞர்கள் மேடை நாடகமுறையில் நகைச்சுவை கலந்த வசனங்களுடன் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அத்துடன் அப்பகுதியில் வந்த வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு வாசகங்களடங்கிய துண்டுப் பிரசுரங்களும் போக்குவரத்துக் காவல்துறையினரால் வழங்கப்பட்டன.

அப்போது நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் நாட்டுப்புறக்கலைஞர்களின் நிகழ்ச்சியைக் கண்டு சாலை விதிகளைக் கடைப்பிடித்தல், தலைக்கவசம் அணிதல், முறைப்படி ஓட்டுநர் உரிமம் பெற்று வாகனங்களை ஓட்டுதல், வாகன ஓட்டிகள் மற்றும் வாகனங்களுக்கான காப்பீடு உள்ளிட்டவை பற்றி விழிப்புணர்வு பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT