தமிழ்நாடு

கூத்தாநல்லூரில் இந்திய கம்யூ. சாலை மறியல்

DIN


கூத்தாநல்லூர்:  திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில், மழையில் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர், ஒப்பாரி வைத்து சாலை மறியல் செய்தனர். 

லெட்சுமாங்குடி பாலம் அருகே, நகரச் செயலாளர் எம்.சுதர்ஸன், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பி.முருகேசு தலைமையில் நடத்தப்பட்ட சாலை மறியலில், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரியும், வேலையிழந்த விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். 2020-க்கான பச்சை பயிருக்கு உரிய பயிர்க் காப்பீடு உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். 

தொடர்ந்து நடைபெற்ற சாலை மறியலில், தமிழ்நாடு விவசாயம் என்ற பதாகையைச் சுற்றி, பெண்கள் மார்பில் அடித்துக் கொண்டு ஒப்பாரியில் ஈடுபட்டனர். திடீர் ஒப்பாரியால் சலசலப்பு ஏற்பட்டது. 

மறியலில், விவசாய சங்க நகரச் செயலாளர் கே.நாகராஜ், விவசாய தொழிலாளர் சங்க நகரச் செயலாளர் எம்.சிவதாஸ்,மாதர் சங்க நகரச் செயலாளர் ஆர்.மகேஸ்வரி, நகர செயற்குழு உறுப்பினர்கள் வி.ராஜேந்திரன், கே.பேபி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.சாலை மறியலால், திருவாரூர் - மன்னார்குடி சாலை, வடபாதிமங்கலம் - கொரடாச்சேரி சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

SCROLL FOR NEXT