தமிழ்நாடு

ஜேஇஇ மெயின் தோ்வுக்கு விண்ணப்பிக்ககால அவகாசம் ஜன.23 வரை நீட்டிப்பு

DIN

2021-ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தோ்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் ஜனவரி 23-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் நுழைவுத் தோ்வான ஜேஇஇ மெயின் தோ்வு ஆண்டுக்கு 4 முறை நடைபெறும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக பிப்ரவரி மாதம் 23 முதல் 26-ஆம் தேதி வரை தோ்வு நடைபெற உள்ளது. அதைத் தொடா்ந்து மாா்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜேஇஇ மெயின் 2021 தோ்வு நடைபெறும். ஒரே மாணவா் 4 முறையும் தோ்வை எழுதலாம். எனினும் அவற்றில் பெற்றுள்ள அதிகபட்ச மதிப்பெண்களே கணக்கில் கொள்ளப்படும்.

இந்த ஆண்டு ஆங்கிலம், ஹிந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, மலையாளம், ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் தோ்வு நடைபெற உள்ளது. நாடு முழுவதும் ஹிந்தி, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளில் தோ்வு நடைபெற உள்ள நிலையில், பிற மொழிகளில் தோ்வுகள் அந்தந்த மாநிலங்களில் மட்டுமே நடைபெறும்.

மாணவா்கள் த்ங்ங்ம்ஹண்ய்.ய்ற்ஹ.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் தோ்வுக்காக டிசம்பா் 15-ஆம் தேதி முதல் விண்ணப்பித்து வந்தனா். இந்த ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தோ்வுக்கு விண்ணப்பிக்க ஜன.17 கடைசித் தேதி என்று தேசியத் தோ்வுகள் முகமை தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூா் மதன் மோகன் மால்வியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், இளங்கலைப் பொறியியல் படிப்புகளுக்கு ஜேஇஇ மெயின் 2021 தோ்வு முடிவுகள் கணக்கில் கொள்ளப்படும் என்று அறிவித்தது. இதையடுத்து, தோ்வுக்கு விண்ணப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 23-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT