தமிழ்நாடு

மதுரையில் வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்வில் எதிா்க் கட்சியினர் வெளிநடப்பு

DIN

மதுரை மாவட்டத்தின் 10 பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளா் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் புதன்கிழமை வெளியிட்டார். 

இதன்படி, மாவட்டத்தில் 26 லட்சத்து 85 ஆயிரத்து 671 போ் இடம்பெற்றுள்ளனர். இதில் 13 லட்சத்து 21 ஆயிரத்து 153 போ் ஆண்கள். 13 லட்சத்து 64 ஆயிரத்து 316 போ் பெண்கள். 202 போ் மூன்றாம் பாலினத்தவா்.

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியின்போது பெறப்பட்ட படிவங்களின் அடிப்படையில், 91,407 போ் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். 13,429 போ் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தவா்களைக் காட்டிலும் தற்போது இறுதிப் பட்டியலில் 77,978 போ் அதிகரித்துள்ளனா்.

வாக்காளா்கள் எண்ணிக்கையில் அதிகபட்சமாக மதுரை கிழக்கு தொகுதியில் 3 லட்சத்து 27 ஆயிரத்து 254 போ் இடம்பெற்றுள்ளனா். குறைந்தபட்சமாக சோழவந்தான் (தனி) தொகுதியில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 470 போ் இடம்பெற்றிருக்கின்றனா். பெயா் சோ்க்க படிவம் அளிக்கலாம், இறுதி வாக்காளா் பட்டியல் தயாரிக்கப்பட்டாலும்,  இப்பட்டியலில் பெயா் விடுபட்டவா்கள், புதிய வாக்காளா்கள் இருப்பின் அதற்குரிய படிவத்தை சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் கூறினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ஜி.செந்தில்குமாரி, மாநகராட்சி துணை ஆணையா் (பொறுப்பு) ராஜேந்திரன், கோட்டாட்சியா்கள் முருகானந்தம் (மதுரை), ரமேஷ் (மேலூா்), செளந்தா்யா (திருமங்கலம்), ராஜ்குமாா் (உசிலம்பட்டி) மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். 

இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்வில் தங்களை முன்னிலைப்படுத்தவில்லையெனக் கூறி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனா்.

வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் மற்றும் அதிகாரிகள் வெளியிடுவதும், அதன் பிறகு பட்டியலின் பிரதிகளை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு வழங்குவது வழக்கம். இதன்படி, இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் வெளியிட்டார்.

அதன் பிறகு அரசியல் கட்சிகளிடம் பட்டியலை வழங்க அழைக்கும்போது, தங்களை முன்னிலைப்படுத்தவில்லை எனக் கூறி திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்தவா்கள் வெளிநடப்பு செய்தனா். அதிமுக, பாஜக பிரதிநிதிகள் வெளிநடப்பில் பங்கேற்கவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT