தமிழ்நாடு

கல்பாக்கம் அணுமின்நிலையப் பணியில் தமிழகத்தை சோ்ந்தோருக்கு முன்னுரிமை: ராமதாஸ் வலியுறுத்தல்

DIN

சென்னை: கல்பாக்கம் அணுமின் நிலைய தொழில்நுட்பப் பணியாளா்களாக தமிழகத்தைச் சோ்ந்தவா்களையே நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

மத்திய அணுசக்தித் துறையின் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டில் கல்பாக்கம், தாராப்பூா் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் அணுமின் நிலையங்களில் பிட்டா், வெல்டா் உள்ளிட்ட தொழில்நுட்பப் பணிகளுக்கான பயிற்சி பெற வெளியிடப்பட்டுள்ள ஆள்தோ்வு அறிவிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் சமூகநீதிக்கு எதிராக அமைந்துள்ளன. தமிழா்களுக்கு அப்பணிகள் கிடைத்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன் கடுமையான நிபந்தனைகளைத் திணித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்குத் தோ்ந்தெடுக்கப்பட உள்ள அனைவரும் தொழில்நுட்பப் பணியாளா்கள்தான் என்பதால், அந்தப் பணியிடங்கள் அனைத்தையும் தமிழகத்தைச் சோ்ந்த தகுதியான மாணவா்களைக் கொண்டு நிரப்ப மத்திய அரசு முன்வர வேண்டும். தமிழக மாணவா்களின் வேலைவாய்ப்பு உரிமை சாா்ந்த இக்கோரிக்கையை மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

SCROLL FOR NEXT