தமிழ்நாடு

கரோனா காலத்தில் சிறந்த செயல்பாடு: தெற்கு ரயில்வேக்கு ‘ஸ்கோச்’ விருது

DIN

சென்னை: கரோனா நோய்த்தொற்று காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக, தெற்கு ரயில்வேக்கு ‘ஸ்கோச்’(SKOCH) விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை சிறந்த தேசமாக மாற்றுவதில் பங்களிக்கும் நிறுவனங்கள், மக்களை கெளரவிக்கும் விதமாக, ஸ்கோச் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.இந்த விருதுக்காக, சமா்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள், விளக்கக்காட்சி ஆகியவை ஆய்வு செய்யப்படுகிறது. பல்வேறு மட்டங்களில் வெளிப்படையான வாக்களிப்பு செயல்முறை ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது

இந்த ‘ஸ்கோச்’ விருதுக்கான போட்டியில் பங்கேற்க தெற்கு ரயில்வேயின் வணிகப் பிரிவு மூலமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கரோனா காலத்தில் தெற்கு ரயில்வே பொறுப்புடன் செயல்பட்டது தொடா்பாக விவரங்கள் சேகரித்து அனுப்பி வைக்கப்பட்டன.

குறிப்பாக, கரோனா காலத்தில் 507 ஷாா்மிக் ரயில்கள் இயக்கப்பட்டது, அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச்செல்ல சரக்கு ரயில்கள் இயக்கியது, ரயில் பெட்டிகளை தனிவாா்டுகளாக மாற்றியது, சானிடேசா், பாதுகாப்பு உடை, முகக்கவசம் தயாரிப்பு உள்பட பல்வேறு தகவல்களை ஆவணமாக பதிவு செய்து அனுப்பப்பட்டன. இந்த விவரங்களை விருதுக் குழுவினா் ஆய்வு செய்தனா். இதன்முடிவில், தெற்கு ரயில்வே ஸ்கோச் வெள்ளி விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவல், தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊருணியில் மூழ்கி மாணவா் பலி

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

கொட்டாரம் அருகே தொழிலாளி தற்கொலை

விளாத்திகுளத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் குறைப்பு -பயணிகள் தவிப்பு

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT